மொன்ரியலில் மருத்துவர்கள் போராட்டம்: ஊதியக் கொள்கை மாற்றத்துக்கு எதிரான ஆயிரக்கணக்கானோரின் எதிர்ப்பு – புதிய சட்டத்தை இடைநிறுத்தக் கோரிக்கை!

images 5 1

கனடாவின் மொன்ரியல் நகரில் உள்ள பெல் மையம் (Bell Centre) முன்பாக இன்று (நவம்பர் 10) மதியம் 2 மணிக்கு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்றுகூடவுள்ளனர். மாகாணத்தில் உள்ள மருத்துவர்களின் ஊதிய முறையில் மாற்றம் ஏற்படுத்தும் புதிய சட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நான்கு மருத்துவச் சம்மேளனங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்தக் கிளர்ச்சி, கடந்த மாதம் மாகாண சபையில் முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) வலுக்கட்டாயமாக நிறைவேற்றிய சட்டமூலத்தை எதிர்ப்பதாக அமைகிறது.

அந்தச் சட்டமூலம், மருத்துவர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை “செயல்திறன் இலக்குகள்” (Performance Targets) என்பதுடன் இணைக்கிறது.

மாற்றங்களைப் புறக்கணிக்கவோ அல்லது எதிர்ப்புக் காட்டவோ முயற்சிக்கும் மருத்துவர்களுக்குச் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் எனச் சட்டம் எச்சரிக்கிறது.

இந்த புதிய சட்டம் தங்களது குரலை அடக்குவதாகவும், அதன் விளைவாக குவெபெக் மாகாணத்திலிருந்து பல மருத்துவர்கள் வெளியேற நேரிடும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, பல மருத்துவ அமைப்புகள் அந்தச் சட்டத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த தீர்மானித்துள்ளன.

Exit mobile version