தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம்
நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெருமளவானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தவறான கருத்துக்களாலும் இவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.