நாட்டில் இன்று மாத்திரம் 927 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகளவு தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் நாடு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 600 வரையான தொற்றாளர்களே பதிவாகி வந்தனர். எனினும், கடந்த டிசம்பர் மாதத்தின் பின்னர் அந்த எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளது.
தற்போது ஆயிரத்தை நெருங்கி வருகின்றது.
#SrilankaNews