இரணைமடு விபத்தில் திருவையாறு இளைஞன் பலி!!

274985618 1614151818950000 430655140620397079 n

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் வயது 29 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

 

 

Exit mobile version