வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை – சொர்க்கப் பானை எரிக்கும் உற்சவம் இன்றையதினம் மிகவும் பக்தி பூர்வமாக ஆலய முன்றலில் இடம்பெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில்முத்துக்குமார சுவாமி எழுந்தருள, கார்த்திகை தீப சொர்க்கப்பானை தீபமேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews