நீதவானையே கத்தி முனையில் மிரட்டிய திருடர்கள்!!!

கத்தி முனையில் 675x360 1

அம்பாறை பொலிஸ் பிரிவில் நீதவான் ஒருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் யன்னலை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த நீதவானின் மனைவியின் தாலிக்கொடியை அறுத்தபோது சத்தம் கேட்டு உடன் எழுந்த நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டார்.

இதன்போது அவரின் கைகளில் கூரிய ஆயுதத்தால் குத்தி தாக்கியதில் நீதவான் காயமடைந்ததையடுத்து கொள்ளையர்கள் தாலிக்கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .

இதேவேளை இந்த பகுதியில் கடந்த வாரம் இருவீடுகளில் உட்புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக்கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இதுவரை கொள்ளையர்களை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version