அரசாங்கம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படவில்லை எனின், பங்காளிக்கட்சிகளுக்கான மாற்று வழிமுறையை நாடிச்செல்ல வேண்டி ஏற்படும். – இவ்வாறு அரசுக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்
மேலும், பங்காளிக்கட்சிகளுக்கு இந்த அரசு தேர்தலுக்கு முன்னர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்குவோம் என கூறியது அரசு. ஆனால் வழங்கவில்லை. – என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர, ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்றும், சுதந்திரத்துக்கு பிறகு உருவான மோசமான அமைச்சரவையே தற்போது உள்ளது என்றும் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews