சசிகலா மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்கப்படமாட்டார் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:- சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?
பதில்:- அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தலைமைக் கழகமும் இணைந்து அவரைக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நானும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது.
கே:- சசிகலா குறித்து ஓ.பி.எஸ். கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:- அரசியல் வேறு. தனிப்பட்ட முறை என்பது வேறு. சசிகலாவுடன் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. அதனடிப்படையில் ஓ.பி.எஸ். பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சினை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.கவில் எந்தக் குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான் – என்றார் .
#indianNews
Leave a comment