நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் பணம் இல்லை
இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார்.
சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்போதேபோதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவசரகால சட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களை அடக்கும் சரத்துக்களை கொண்டு வருமாக இருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தாம் தயார்.
அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க அவசரகால சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.
ஆனால், இந்த அவசரகால சட்டத்தின் கீழ் மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
நாட்டில், அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் தற்போது பணம் கிடையாது – என்று தெரிவித்துள்ளார்.