ஒக்டோபர் மாதம் தொடக்கம் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படுகின்ற டிசம்பர் மாத விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் அனைத்தும் நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது
இதன்படி 200 மாணவர்களுக்கு குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை விரைவாக திறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் 200 மாணவர்களை விட குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் 5, 131 உள்ளன. இதில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வகையில் 1-5 வரையான வகுப்புக்களுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கமுடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.