மலையகத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் பல வர்த்தக நிலையங்களிற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் எரிவாயு இல்லாததன் காரணமாக எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
எரிவாயு இல்லாததன் காரணமாக பல குடும்பங்கள் மண்ணெண்ணை அடுப்புக்கு மாறிய போதிலும் தற்போது மண்ணெண்ணைக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
புத்தாண்டினை கொண்டாடுவதற்காக இன்று (31) காலை மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக பலர் எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்த போதிலும் மண்ணெண்ணை இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேவேளை, ஒரு சில எண்ணை நிரப்பு நிலையங்களில் மாத்திரம் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட்டதன் காரணமாக பெரும் எண்ணைக்கையிலானவர்கள் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.
குறித்த எண்ணை நிரப்பு நிலையங்களில் அதிக பட்சம் 5 லீற்றர் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒரு சில பகுதிகளில் கேஸ் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக வெற்று சிலிண்டர்களை மாற்று உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தன.
#SrilankaNews