WhatsApp Image 2022 03 12 at 12.01.49 PM
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய அரசுக்கு வாய்ப்பே இல்லை ! – மஹிந்த திட்டவட்டம்

Share

தேசிய அரசு அமைவது குறித்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்துக்கொண்டு தேசிய அரசு அமைப்பது பற்றி செய்தி அடிபடுவது குறித்து கேள்வி எழுந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர்,

“தேசிய அரசொன்று அமையலாம் என்பது வெறும் பேச்சுதான். இருக்கும் அரசு பலமானதாக இருக்கின்றதே. இப்படியொன்று நடக்கின்றதா என்பது எனக்குத் தெரியாதே? சிலவேளை ரணிலுக்கு மனதில் ஆசை (பிரதமராக வேண்டும் என) இருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” – என்றார்.

அரசு இப்போது முன்னாள் பிரதமர் ரணிலிடம்தான் ஆலோசனைகளைக் கேட்பதாக சில செய்திகள் கூறுகின்றனவே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

“வங்கியொன்றைக் கொள்ளையிட வேண்டுமானால் ரணிலிடம் ஆலோசனை கேட்கலாம். அரசியல் ஆலோசனைகளை அவரிடம் கேட்குமளவுக்கு அரசு இன்னும் தாழ்ந்துவிடவில்லை” – என்றார்.

WhatsApp Image 2022 03 12 at 12.01.49 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...