தொற்று அபாயம் நீங்கவில்லை! – சவேந்திர சில்வா

uuu

நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்தபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை.

இதனை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாலித்தனமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படாதுவிட்டால் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தளபதி கூறியுள்ளார்.

தற்போது தினமும் 500 முதல் 600 தொற்றாளர்கள் கண்டறியப்படினும் பொதுமக்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.

இல்லையெனில் எதிர்காலத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version