உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

1760884555 Paris Louvre Museum Sri Lanka 6

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக, அருங்காட்சியகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அருங்காட்சியகம் இன்று (அக்டோபர் 19) காலை திறக்கப்பட்டபோது இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், என்ன திருடப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

232 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகம் 1793 இல் திறக்கப்பட்டது. இதில் 16 ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உட்படப் பல உலகப் புகழ்பெற்ற பழங்காலக் கலைப்பொருட்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும், 8.7 மில்லியன் மக்கள் லூவ்ரே அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர், இது அந்த ஆண்டில் உலகிலேயே அதிகளவானோர் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version