யாழில் வயோதிபப்பெண்ணை ஏமாற்றிவிட்டு 1000 ரூபாவுடன் இளைஞர் தப்பியோட்டம்!

jaffna

மண்ணெண்ணெய் வாங்கித் தருவதாகக் கூறி வயோதிபப் பெண்ணிடம் ஆயிரம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிபப் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த இளைஞர் ஒருவர், “வரிசையில் நிற்க வேண்டாம். உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருகின்றேன்” என்று கூறி வயோதிபப் பெண்ணிடம் 1000 ரூபா பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றவர்கள் ஊடாக நழுவித் தப்பியோடியுள்ளார்.

நீண்டநேரமாக மண்ணெண்ணெய்க்காகக் காத்திருந்த வ்யோதிபப் பெண், தான் காசு கொடுத்த இளைஞரைக் காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

#SriLankaNews

Exit mobile version