பிரசவ வேதனையிலும் துவிச்சக்கர வண்டியில் சென்று குழந்தையை பிரசவித்த பெண்மணி!

FD

Julie Anne Gender

பிரசவ வேதனையிலும் துவிச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பெண்மணி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் என்னும் பெண்மணியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

41 வயதுடைய ஜூலி அன்னே ஜெண்டர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்திலுள்ள வைத்தியசாலைக்கு தனது துவிச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அவர் சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அத்தோடு தாயும், சேயும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனிடையே பிரசவ வலியோடு துவிச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு சென்று புகைப்படத்தை ஜூலி,முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

அப்பதிவு உலகநாடெங்கிலும் பரவி அவருக்கு மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அத்தோடு ஜூலி, கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் வண்டியில் சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

#WORLD

Exit mobile version