தென்னிலங்கையில் முரண்பாடு கொலையில் முடிந்துள்ள திருமண நிகழ்வு

திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 54 வயதுடைய படவிகம, லுனுகம்வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் .

அவர் திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் நேற்று மனைவியின் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

#srilankanews

Exit mobile version