அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 30 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அநுராதபுரம் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் உடல்நலம் குறைந்தோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புடன் இருந்த சுமார் 100 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews