இந்திய மத்திய அரசின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் திட்டங்கள் ஆகியவற்றை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முதல் இந்த இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
“வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் குறித்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.சார்பான தொழிற்சங்கங்க உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில், அரச பஸ் சேவைகள் இடம்பெறாத நிலையில், தனியார் பஸ் சேவைகள் மற்றும் இடம்பெற்றன. இதனால் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட வங்கி சேவைகள்
அரசு அலுவலக பணிகல், தபால், வருமானவரித்துறை, சுங்கம், கலால் மற்றும் மின்சாரத்துறை பணிகள் ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
#IndiaNews