ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஏப்ரல் 01 ஆம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்கவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் அதில் விளக்கமளிக்கப்பட்டிருக்கும்.
#SriLankaNews
Leave a comment