முல்லைத்தீவு – தனிமையில் இருந்த பெண்ணிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்!

pearl one news கொள்ளை 750x375 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் கொள்ளை சம்பவமொன்று இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. .

விசாரணையின் போது, பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் பெண்ணை கட்டிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து 15 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம் மற்றும் பெறுதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை தெரியவருகின்றது.

#SriLankaNews

Exit mobile version