கலாநிதி பட்டம் பெறுவதற்கு அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்று அதனை மீள செலுத்தாத விரிவுரையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை வழங்காமலிருக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,
சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமது கலாநிதி பட்டப்படிப்பை இடைநடுவே கைவிட்டுள்ளனர். இவர்களிற்காக அரசாங்கத்தினால் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அத்தகைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமக்கான ஓய்வூதியத்தை பெறும்போது, அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து குறைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விரிவுரையாளர்களில் சிலர் தற்போது பல்கலைக்கழகங்களில் இருந்து விலகியுள்ளனர். என்றார்.
#SrilankaNews

