ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடபோகும் முன்னாள் ஜனாதிபதியின் மகன்!!

Maithripala Daham

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தஹாம் சிறிசேனவை அரசியலுக்குள் நுழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version