பணவீக்கம் அதிகரித்துச்சென்றால் சிம்பாபே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வெளிநாடுகளிடம் அடிபணியமாட்டோம் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். ஆனால் இன்று கடன் கேட்டு உலக நாடுகளிடம் மண்டியிடுகின்றனர். நாளாந்த சுற்றுலா வாசிகள்போலவே இந்த அரசு செயற்படுகின்றது. நீண்ட நாள் திட்டம் இல்லை.
பணம் அச்சிடப்படுகின்றது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கப்படும். சிப்பாப்பே நாட்டில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும். எனவே, முடியாவிட்டால் இந்த அரசு பதவி விலக வேண்டும். முடியுமானவர்களிடம் ஆட்சி கையளிக்கப்பட வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews