மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு சிங்கள மக்கள் செயற்பட வேண்டும்

vadivel suresh 5

சிங்கள மக்கள், மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அன்று வாக்களித்து இன்று அரசை விமர்சிக்கும் சிங்கள மக்கள், மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டு சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். இப்போது தை பிறந்துள்ளது. நிச்சயம் வழி பிறக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு வலித்தால் எமக்கும் வலிக்கும். இது தொப்புள் கொடி உறவு இதை எவராலும் அசைக்க முடியாது.

வேதனைக்கு மத்தியில் சாதனை படைப்பது தான் இந்த மலையக மக்கள். பெருந்தோட்ட கம்பனிகாரர்களினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றார்.

#SriLankaNews

Exit mobile version