மசாஜ் நிலைய போர்வையில் விபச்சார விடுதி! – 10 பேர் கைது

6977 maharagama massage centre roundup1241276555

கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றைபொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. ஏனைய பெண்கள் 27, 32, 33, 41, 42 வயதுகளையுடையவர்கள் என தெரியவந்துள்ளது. அத்திடிய, களனி, ஓபநாயக்க, கொகரெல்ல, பிலியந்தலை, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் திருமணமான பெண்கள் எனவும் தெரியவருகின்றது.

விபச்சார விடுதி அமைந்துள்ள கட்டடம் மாதம் 300,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதேசத்தில் தாங்கள் மிகச் சிறப்பாக தொழில் செய்து வருவதாகவும், விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் குறித்த பெண்கள் வீடுகளுக்குத் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version