9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபைஒத்திவைப்புவேளை விவாதம் நடைபெறவுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பிரதான தரப்புகள் அவதானம் செலுத்தியுள்ளன.
நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன் என கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். அதற்கான திட்டங்கள் மற்றும் புதிய அரசமைப்பு எப்போது இயற்றப்படும் போன்ற தகவல்களை அவர் வெளிப்படுத்துவார் என்பதாலேயே , ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது சர்வதேசத்தின் கவனமும் திரும்பியுள்ளது.
#SriLankaNews