இலங்கை முதலீட்டு சபை உறுப்பினர்கள் பலரின் பதவி விலகலால் குழப்பம்

cropped BOI LOGO

இலங்கையில் முதலீட்டு சபையின் இயக்குனர் சபை முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.

சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகியதை அடுத்து பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் பதவி விலகியுள்ளதாக தெரியவருகின்றது. பதவி விலகியமைக்கான தெளிவான காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த காலங்களில் இலங்கை முதலீட்டு சபைக்கு உயர் சம்பளத்துடன் 29 பேர் நியமிக்கப்பட இருந்தனர். புதிய முதலீடுகளை கவர்வதற்கு புதிய திறமை வாய்ந்தவர்கள் அவசியம் என்பதனாலேயே புதியவர்களை நியமிப்பதற்கு முதலீட்டு சபை தீர்மானித்திருந்தது.

ஆனால் அதனை இரத்து செய்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை கடுமையாக எதிர்த்த இலங்கை முதலீட்டு சபை உறுப்பினர்கள் இப்பதவி விலகலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SriLankaNews

Exit mobile version