வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் நாடு முழுதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ் இடமாற்றம் அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் பிரபாத் சுகதபால,
இப்பிரச்சினை 38 சதவீத வைத்தியர்களை பாதித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் 6,969 வைத்தியர்கள் தமது கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதனால் ஆதார வைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு சில வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் பற்றாக்குறையும், அதிதீவிர சிகிச்சை பிரிவின் செயற்பாடுகளில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment