DSC07399
செய்திகள்அரசியல்இலங்கை

முழுமையாக நீக்குங்கள்! – நுவரெலியாவில் சுமந்திரன் வலியுறுத்து

Share

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இந்தச் சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்.”

-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 40 ஆண்டுகாலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையிடையே சிங்கள இளைஞர்கள் தண்டிக்கப்பட்டனர். தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர.

எனவே, இது மக்கள் கோரிக்கையாகும். அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...