ஜனாதிபதியின் போக்கு சற்றும் மாறவில்லை! – சலிப்படையும் மனோ

mano

ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான தன்னுடைய அரசின் கொள்கையை விளக்கி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி  இன்று உரையாற்றினார். அவரது உரையில் நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கும் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உரை நிறைவுபெற்றதை அடுத்து நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அவதானித்தேன். அவருடன் நான் உரையாடியபோது அவர் சலிப்புடன் காணப்பட்டார். அவரின் இந்த நிலை எனக்கு மிக மன வருத்தத்தை தந்தது – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version