மதுரையில் கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பொலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தனது வீட்டில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாயை வளர்த்து வருகிறார். குடும்பத்தில் ஒருவராக உள்ள அந்த நாயை பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
சுஜி என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய் கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வழங்கும் 5 வகையான கலவை சாதம் நாய்க்கு பரிமாறப்பட்டது. அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#IndiaNews