மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று இரவு சுமார் 8.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்னத்துரை ரஞ்சன் என்ற 60வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்தவராவார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews