டாக்சி டிரைவரான பிகுல் இஸ்லாம் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் குருகிராமில் செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 3 திருமணங்கள் முடித்த பிகுல் இஸ்லாம் தன்னுடைய 3 ஆவது மனைவியுடன் குருகிராமில் வசித்து வந்துள்ள நிலையில் அங்குள்ள இளம் யுவதியுடன் காதல் மலர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த யுவதி பால் வாங்க வெளியில் சென்று வீடு திரும்பாததால் குடும்பத்தார் பொலிஸில் முறைபாட்டை மேற்கொண்டிருந்தனர்.
தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் யுவதியின் சடலத்தை கண்டு பிடித்த பொலிஸார் சந்தேகநபரை தொடர்ந்தும் தேடி வந்துள்ளனர். நேற்றைய தினம் சந்தேகநபரான பிகுல் இஸ்லாம் இந்தியா வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் குறித்த இளம் யுவதியை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#IndiaNews
Leave a comment