மியாமியில் விற்பனையான ஒரு மாளிகை பற்றிய செய்தி தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இம் மாளிகையின் விலை சுமார் 32 மில்லியன் டொலர் அதாவது‚ இந்திய ரூபாயில் கிட்டதட்ட 238 கோடி. இதைவிட‚ இந்த மாளிகையின் சொந்தகாரர் GUNTHER VI என்ற ஜேர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த ஒரு நாய் என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது கர்லோட்டா லெய்பென்ஸ்டீன் என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி GUNTHER III என்ற நாயை வளர்த்துள்ளார். அவர் தான் இறப்பதற்கு முன்னர் 58 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்தை தனது வளர்ப்பு நாயின் பெயரில் மாற்றியுள்ளார். இதனை பாதுகாக்க ஒரு டிரஸ்ட் அமைப்பினையும் தோற்றுவித்து ஒரு விசேட குழுவினையும் நியமித்துள்ளார்.
இன்றைக்கு இந்த டிரஸ்ட் அமைப்பு இத்தாலிய நாட்டு வணிகர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இம் மாளிகை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் நுழைவாயில்கள் சுற்றிலும் கன்னை கவரும் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறம் பவழத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள‚ விலையுயர்ந்த அலங்காரங்களால் ஆனது.
மேலும்‚ 2000 ஆம் ஆண்டு இந்த மாளிகை விற்பனைக்காக பட்டியலிடப்பட்டபோது இந்த மாளிகையின் சொந்தகாரர் ஒரு நாய் என்பதை யாரும் அறியவில்லை என மாளிகைகளை விற்பனை செய்யும் அசோலின் டீம் என்ற நிறுவனத்தை சேர்ந்த ரூத்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலையில் இந்த நாய் உலகத்திலே பணக்கார நாய் (GUNTHER VI) என்ற பெருமைக்கும் சொந்தகாரராக அறிவிக்கப்பட்டுள்ளது.
#World
Leave a comment