60 வயதிற்கு மேற்பட்ட 3776 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை தெரிவித்தார்.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை முதியோர் கழகங்கள் மற்றும் முதியோர் அமைப்புக்கள் ஊக்குவித்து அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தம்மையும் தம் குடும்பத்தாரையும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டு வறுமையில் காணப்படும் எமது மாவட்டத்தில் தொற்றுக்களின் பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews