இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த தினங்களைவிட நேற்று ஒரு நாளில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 16,764 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 என அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கூடுதல் கட்டுப்பாடுகள்கூட விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 16,764ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது 91,361 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,585 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
#India