சிங்கள மக்கள் மட்டுமல்லாது, பௌத்த தேரர்களும் எப்படியாவது ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இனி ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் காலம் உருவாகின்றது. ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews