கொரோனா தடுப்பூசி செலுத்திய தாதியின் இடுப்பை தொட்ட நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் செயலால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து குறித்த நபர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நபரை தொடர்ந்தும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கையில் வலி ஏற்பட்டதை அடுத்து தாதியின் இடுப்புப் பகுதியில் கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
#SriLankaNews