பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால பிரேக் இழுக்கப்பட்டமையால், அப்பெண்ணின் மீது ஏறாமல் மிக நெருக்கமாக வந்து நிறுத்தப்பட்டது, இதனால் அதிர்ஷ்டவசமாக அப் பெண் காயமின்றி உயிர் தப்பினார்.
குறித்த இந்த வீடியோக் காட்சியில், ரயிலின் முன் அப்பெண்ணை தள்ளுவதற்கு முன், அந்த நபர் பிளாட்பாரத்தில் ஓய்வில்லாமல் நடந்து திரிந்துள்ளார். அதற்குப்பின்னரே இச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதை சிசிரிவிக் காட்சிகள் தெளிவுபடுத்துகிறது
#WorldNews
Leave a comment