வடக்கு முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர்!

33 2 720x375 1

வடக்கு முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளர் பதவிக்கு அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்ததது. இந்த நிலையில் அவ் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கிளிநொச்சி  மற்றும் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இரு பொறியியலாளர்களுக்கு  தகுதி இருந்தது.

ஆனாலும் திருகோணமலையில் பணியாற்றி வந்த குறித்த பெரும்பான்மை இனத்தவர் அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version