சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த பச்சிளங்குழந்தை!!

newborn 1

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது.

திடீர் மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண் குழந்தையே உயிரிழந்தார்.

குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுதிணறலால் புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பயனின்றி இரவு 9 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

குழந்தையின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோவிட்-19 தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.

குழந்தையின் இறப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version