மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்!

murder 178678

குடும்பத் தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசன்குளம் கட்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து கணவன் தனது மனைவியின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கட்பகபுரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version