வாக்குகளை வழங்குகள் எனக்கோரி, ஊருக்குள் வந்தால் மண்வெட்டி பதிலளிக்கும் – விவசாயிகள்

farmers

வாக்குகளை வழங்குமாறு கோரி விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தமது பொறுமைக்கும் எல்லை உண்டு எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version