சந்திரிகா
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் நிலைமை படுமோசம்; அரசே உடன் பதவி விலகுக! – சந்திரிகா அவசர வேண்டுகோள்

Share

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்ற பின்னர் சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது.

இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர்.

பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...

images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது....

25 694be11238450
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி காணி மக்களின் காணி மக்களிடமே வழங்கப்பட வேண்டும் – நாக விகாரை விஹாராதிபதி வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதை ஏற்றுக்கொண்ட யாழ். நாக...

Untitled 62 1
செய்திகள்இலங்கை

குடிபோதையில் கடமையாற்றிய CTB நடத்துநர்: பயணிகளின் முறைப்பாட்டால் அதிரடி இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் குடிபோதையில் கடமையாற்றிய நடத்துநர் ஒருவர், பயணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து...