” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இந்த அரசே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் டொலர் தட்டுப்பாடு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறிவந்தார். அரசில் உள்ள மேலும் சிலரும் இந்த கருத்தையே வெளியிட்டனர். ஆனால் தற்போது டொலரை பெறுவதில் சிக்கல் என கூற ஆரம்பித்துள்ளனர். அரசுக்குள் இருப்பவர்கள் தங்களிடையே பந்துகளை பறிமாறிக்கொள்கின்றனர். மாறாக பிரச்சினைக்கு தீர்வை காண முற்படவில்லை. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. நாடு வங்குரோத்தடையும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இதற்கு தற்போதைய அரசு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் அரசுக்கு ஆலோசனை வழங்கினோம். அந்த ஆலோசனையையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.” எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.
#SriLankaNews

