சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி மரணம்!

1594580822 girl

உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா(வயது – 4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு ஏற்பட்ட சுவாச பிரச்சினையாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version