உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – விவாதத்திற்கு தயார் என்கிறார் இராஜாங்க அமைச்சர்

nimal lanza 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாமும் தயார் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” விவாதத்துக்கு நாமும் தயார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கும் தகவல்களை வெளியிட வேண்டியுள்ளது.” – எனவும் லான்சா குறிப்பிட்டார்.

#SriLankaNews

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விவாதம் வேண்டும் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

 

Exit mobile version