பல்கலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

corona vaccination 87687

நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், நாள்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் ஆகியோருக்கும் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள்நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version