‘ஒமிக்ரோன்’ தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் தொற்றியுள்ளது.
குறித்த நபர் நைஜீரியாவிலிருந்து கடந்த 23ஆம் திகதி நாட்டிற்குள் வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வைரஸ் பரவல் ஏனையோருக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரங்களில் தென்னாபிரிக்காவில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸால் உலக நாடுகள் தமது எல்லைகளில் வெளிநாட்டவர்களுக்கு அனுமதியை தடைசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews